13 வயதிலேயே அந்த படங்களின் அந்த காட்சிகளை பார்த்து உடல் நெளிந்துள்ளேன்! பிரபல நடிகை வெளியிட்ட சீக்ரெட்..!

தமிழில் பூ , மரியான் போன்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பார்வதி மேனன்.


இவர் தமிழைப் போலவே மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆவர். சமீபத்தில் நடிகை பார்வதி மேனன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பேசியிருந்தார்.

அப்போது பேசிய அவர், பெண்களுக்கு எதிராக பல திரைப்படங்களில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன . இதனைப் பார்த்து ரசிகர்கள் கைதட்டி மகிழ்ச்சி கொள்கின்றனர். இது மிகவும் மோசமான மன நிலையை காட்டுகிறது என்று அவர் கூறியிருந்தார். 

பெண்களுக்கு எதிராக அமையும் காட்சிகளை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காக அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திரைப்படங்களை எடுக்காமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலாக ரசிகர்களை சற்று யோசிக்க தூண்டும் வகையில் திரைப்பட காட்சிகளை அமைத்தால் அது நமக்கும் நமது சமுதாயத்திற்கு நன்மையை பயக்கும் என்றும் நடிகை கூறியிருந்தார்.

ஆகையால், தான் நடிக்கும் திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகள் அமையாமல் கவனமாக உள்ளதாகவும் நடிகை கூறியிருந்தார். இதேபோல் மற்ற நடிகைகளும் தங்களது திரைப்படங்களில் பெண்களுக்கு எதிரான காட்சிகளை இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று நடிகை பார்வதி மேனன் கூறினார்.

வணிக நோக்கத்திற்காக இம்மாதிரியான காட்சிகளை வைத்து திரைப்படங்களை எடுப்பது பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. எனக்கு 13 வயது இருக்கும்போதே இம்மாதிரியான காட்சிகள் படத்தில் இடம் பெறும்போது உடல் நெளிந்து இருக்கிறேன் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அம்மாதிரியான காட்சிகளை பார்த்த ரசிகர்கள் கைதட்டி ரசித்து உள்ளதையும் நான் பார்த்துள்ளேன் என்று ஆதங்கத்துடன் கூறினார் நடிகை பார்வதி மேனன். 

இதேபோல் தெலுங்கு திரையுலகில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் பாலியல் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது என்றும் நடிகை பார்வதி மிகவும் கவலை கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.