வெறும் பிரா தான் போட்டு இருக்கியா? பிரபல நடிகையிடம் அவரது தந்தை கேட்ட கேள்வி! ஏன் தெரியுமா?

பிரபில திரைப்படம் ஒன்றில் இடம்பெற்ற பாடல் காட்சியை பார்த்த நடிகை நுஷ்ரத் பருச்சாவின் தந்தை, வெறும் பிரா மட்டும்தான் போட்டு இருக்கிறாயா ? என்று கேள்வி எழுப்பியது பற்றி நடிகை முதன்முறையாக மனம் திறந்திருக்கிறார்.


நடிகை நுஷ்ரத் பருச்சா தன்னுடைய சொந்த முயற்சியில் திரை துறையில் நுழைந்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். தனக்கென்று ஒரு சிறப்பான அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி பகிர்ந்திருக்கிறார். தன்னுடைய பெற்றோரை பற்றியும் பல தகவல்களை அவர் கூறியிருக்கிறார்.

நடிகை நுஷ்ரத் பருச்சா, அப்போது ​​சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படத்தில் சோட்டே சோட்டே என்ற பாடல் இடம்பெறும். இந்தப் பாடல் நடித்து விட்ட பின்பு நடிகை வீடு திரும்பியிருக்கிறார். எப்பொழுதும் சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் விஷயங்களை பற்றி தன்னுடைய பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளும் அவர் அன்றைய தினம் எதைப்பற்றியும் பேசாமல் இருந்திருக்கிறார். பின்னர் சில நாட்கள் கழித்து அந்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. திரைப்படத்தில் இடம்பெறும் அந்த பாடல் பிரபலம் அடைய ஆரம்பித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து நடிகையின் வீட்டிலும் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். நேரத்தில் இந்த திரைப்படத்தில் இடம் பெறும் சோட்டே சோட்டே என்ற பாடல் அவர்களது இல்லத்தில் இருந்த மிகப்பெரிய டிவியில் ஒளிபரப்பப் பட்டது. அந்த பாடலை நடிகை நுஷ்ரத்த்தின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் பார்த்துக் கொண்டிருந்தனர். நடிகை நுஷ்ரத் செய்வதறியாது திகைத்து போய் இருந்திருக்கிறார்.

இந்தப் பாடலில் வரும் காட்சிகள் நடிகை ஒரு விதமான சிவப்பு நிறத்தில் பிரா போன்ற உடையை அணிந்து கொண்டு நடனமாடி இருப்பார். இதனைப் பார்த்த அந்த நடிகையின் தந்தை அவரை நோக்கி மெதுவாக திரும்பி, நீ அந்த பாடலில் காட்சிகள் பிரா மட்டும்தான் அணிந்து இருக்கிறாயா? என்று கேட்டிருக்கிறார். இதனைக் கேட்ட அந்த நடிகை உடனடியாக சத்தமாக சிரித்து இருக்கிறார். இந்த தகவலை நடிகை நுஷ்ரத் அந்த பேட்டியில் பங்கேற்று கூறியிருக்கிறார்.