இன்னும் நீங்கள் விர்ஜினா? அதாவது கன்னிப் பெண்ணா? நேருக்கு நேராக கேட்ட ரசிகர்! தரமான பதில் அளித்த நடிகை!

அத்துமீறி தன்னிடம் கேள்வி கேட்ட சமூகவலைதள வாசிக்கு நடிகை நிவேதா தாமஸ் தக்க பதிலடி அளித்துள்ளார்.


தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை நிவேதா தாமஸ். பாபநாசம் திரைப்படத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு மகளாக நடித்திருந்தார். தற்போது தர்பார் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கியூட்டான தனது நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் இவர் என்று கூறலாம். சமீபத்தில் நடிகை நிவேதா தாமஸ் தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடுவார் சமூக வலைத்தளத்தில் லைவ்வில் தோன்றி இருந்தார். இதனையடுத்து இவரது ரசிகர்கள் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பினர் அதற்கு நிதானமாக பதில் அளித்தபோது சில கேள்விகளால் பெரிதும் கடுப்பானார். அதாவது நெட்டிசன்கள் சிலர் எப்போது கல்யாணம்?

உங்களுக்கு பாய்பிரெண்ட் இருக்கிறாரா? அதைப் பற்றி கூறுங்கள் ..மேலும் நீங்கள் வெர்ஜினா ? என பல கேள்விகள் எழுப்பினர். ஆனால் நடிகை நிவேதா தாமஸ் இம்மாதிரியான கேள்விக்கு பதிலளிக்காமல் அமைதி காத்தார். இதன்பிறகு லைவ் நிகழ்ச்சி முடிவடைந்த உடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த பதிவில் தன்னுடன் நேரம் செலவழித்த ரசிகர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்தார். இம்மாதிரியான அநாகரிகமான கேள்விகளை எழுதுவதற்கு முன்பாக நானும் உங்களைப் போல் சாதாரண மனுஷி தானே என்று உணர்ந்து கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார் . மேலும் நீங்கள் பேசும் பொழுது மரியாதையோடும் கண்ணியத்தோடும் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று அந்த பதிவில் கூறியிருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.