லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடி மாற்றம்! பாக்கியலட்சுமி கேரக்டருக்கு புது நடிகை..! யார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் லட்சுமி ஸ்டோர் சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் இனிமேல் நடிகை நித்யா ராம் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சீரியல்கள் என்றாலே சன் டிவி சீரியல்களுக்கு மக்களிடத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. சீரியல்களை பார்ப்பதற்காகவே பெரும்பாலான ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பது வழக்கம். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் லட்சுமி ஸ்டோர் சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் நடிகை குஷ்பூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் தொகுப்பாளினி நக்ஷத்ரா பாக்கிய லட்சுமி இந்த கதாபாத்திரத்தில் வலம் வருகிறார். இவர் இந்த சீரியலை விட்டு விலகப் போவதாகவும் இவருக்கு பதிலாக சன் டிவியில் மற்றொரு சீரியல் ஆன நந்தினி சீரியலின் மூலம் பிரபலமான நடிகை நித்யா ராம் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதனை பற்றிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


அதுமட்டுமில்லாமல் லட்சுமி ஸ்டோர் சீரியலில் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது என்றும் அந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நித்யாராம் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.