ஆபாச பேச்சு! பாலியல் துன்புறுத்தல்! விஜய் ஹீரோயின் வெளியிட்ட பகீர் தகவல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நித்யா மேனன், தான் இட்லி பல இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறியுள்ளார்.


தமிழ் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகை நித்யா மேனன் ஆவார். நித்யா மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது பேசிய அவர் ஆரம்பத்தில், சினிமா துறையில் நுழைந்த பொழுது ஓரிரண்டு படங்களில் நடித்து விட்டு பின்பு விலகி விடலாம் என்று தமிழ் நினைத்ததாக கூறினார்.

ஆனால் திரைப்படங்களில் நடிப்பது தனக்கு மிகவும் பிடித்துவிட்டதால் தொடர்ந்து படங்களில் நடித்த நடிகை நித்யா மேனன் ஆரம்பித்ததாக கூறினார். மேலும் பேசிய அவர் சினிமாத் துறையில் மட்டும் அல்லாமல் பெண்களுக்கு பல துறைகளிலும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. மற்றவர்களைப் போலவும் நானும் பல இடங்களில் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து உள்ளேன்.

ஒரு சிலர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் நான் பாதுகாப்பு இன்மையை இதுவரை உணர்ந்தது கிடையாது. என்னிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு சிலரிடம் முதலில் பெண்களிடம் கௌரவமாக நடந்து கொள்ள கற்றுக் கொள்ளுங்கள் என்று கறாராக கூறி விட்டேன். மேலும் ஓர் இடத்தில் தவறு நடக்கிறது என்றால் அதை நாம் தைரியமாக எதிர்த்து போராட வேண்டும் எனவும் நடிகை நித்யா மேனன் கூறினார்.

எந்த ஒரு பிரச்சனையும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டால் அது நமக்கு நன்மையை தரும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் நம்முடைய தைரியத்தை இழந்துவிடாமல் துணிந்து நின்று போராட வேண்டும். மேலும் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள எவரேனும் முயற்சி செய்தால் அவர்களின் முகத்தில் அறைந்தது போல் தைரியமாக கூற வேண்டும். தைரியமாக இருந்தாலே பெண்கள் பல பிரச்சினையிலிருந்து விடுபட்டு விடலாம் எனவும் நடிகை நித்யா மேனன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான "தி அயன் லேடி" திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜெயலலிதா போலவே நடிகை நித்யா மேனன் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக பல பிரத்யேகமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.