கமல்..! ரஜினி படங்களின் ஹீரோயின்! வரக்கூடாத நோய்! சாலையில் வீசப்பட்ட பரிதாபம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

கமல் , ரஜினி ஆகியோர் உடன் நடித்த பிரபல நடிகை நிஷாவின் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


பொதுவாகவே கதாநாயகி என்றால் கவர்ச்சிக்கு மட்டும் தான் சினிமாவில் பயன்படுத்தப்படுவார்கள் என்று கருத்து நிலவுகிறது. அதே ஒரு கதாநாயகி மவுசு குறைந்து நடிப்பதை விட்டு வெளியேறிவிட்டால் அவர்களை யாரும் என்று கண்டுகொள்ளாத நிலையும் நம் தமிழ் சினிமாவில் இருக்கிறது என்றால் அதை நம்பி தான் ஆக வேண்டும்.

அந்தவகையில் 90களில் நடித்து பிரபலமடைந்த கதாநாயகி ஒருவர் தற்போது மிகவும் பரிதாபமான நிலையில் இருக்க இடமும் உணவும் இல்லாமல் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் ‘டிக்..டிக்..டிக்’, ‘ராகவேந்திரா’, ‘கல்யாண அகதிகள்’, ‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூணுகால்,’ ‘மானாமதுரை மல்லி’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிஷாவி. 

நாயகி நிஷாவின் சொந்த ஊரான நாகூரில் தர்கா ஒன்றில் யாருமே இல்லாமல் அனாதையாக கிடந்துள்ளார். எய்ட்ஸ் நோயாளி நிஷா எலும்பும் தோலுமாக உடலின் மீது ஈக்கள் மொய்த்து கொண்டு பார்ப்பதற்கு பரிதாபமான நிலையில் இருந்துள்ளதை பார்த்த அங்கிருந்தவர்கள் இவர் நடிகை நிஷா என்று கண்டறிந்துள்ளனர். நடிகை நிஷாவின் சொந்தக்காரர்கள் அந்த பகுதியிலேயே மிகவும் வசதியாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரை பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளத்தில் சமீப நாட்களுக்கு முன்பாக பரவ ஆரம்பித்தது. இதனை பார்த்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி முருகேசன் இந்த பிரச்சனையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் ‘சுவோ மோட்டோ’வாக எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் அவர் இது நடிகைக்கு தேவையான சிகிச்சையை அளிக்க வேண்டும் எனவும் இதுவரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை பற்றி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இருப்பிடமும் இல்லாமல் யாருடைய உதவியும் இல்லாமல் ஒரு பெண் அனாதையாக தெருவில் கிடக்கும் அவலநிலை அவருடைய வாழ்வு உரிமை மீறலை காட்டுகிறது என்று கூறினார் நீதிபதி முருகேசன்.