என் தந்தைக்காக டிவியில் கவர்ச்சி காட்டினேன்..! ஆனால் நான் விபச்சாரி இல்லை..! பிரபல நடிகை வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!

தந்தை உயிரை காப்பாற்றுவதற்காகவே சீரியல்களில் கவர்ச்சியாக நடித்தேன் என்று பிரபல சீரியல் நடிகை மற்றும் துனண நடன இயக்குனரான நீபா மனம் திறந்துள்ளார்.


மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக பிரபலம் அடைந்த நடிகை நீபா, அதன் பின்னர் துணை நடன இயக்குனராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு நடிகர் விஜய்யின் காவலன் திரை படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனால் சினிமாத் துறையிலும் நடிகை நீபா பிரபலமானார். இதன் பின்னர் இவர் சீரியல்களில் கவர்ச்சியாக நடித்து சின்னத்திரையிலும் பிரபலமானார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தந்தை உயிரை காப்பாற்றுவதற்காகவே நான் சீரியல்களில் கவர்ச்சியாக நடித்தேன் என்று மனம் திறந்துள்ளார். இது பற்றிப் பேசிய நடிகை நீபா சினிமாவில் கவர்ச்சியை ரசிப்பவர்கள், சின்னத்திரையில் கவர்ச்சியாக நடித்தால் கால் கேர்ள்ஸ் என்று அசிங்கமாக கூப்பிடுகிறார்கள்.

நடிப்பு என்னுடைய தொழில். யார் கூட வேண்டுமானாலும் நடிப்பேன். மேலும் கவர்ச்சியாக நடிப்பவர்களை தவறாக எண்ணவேண்டாம். எந்த மன நெருக்கடியில் அவர்கள் நடித்து இருப்பார்கள் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும் எனவும் நடிகை நீபா கூறினார்.

முன்பெல்லாம் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு தனியாக நடிகைகள் இருப்பார்கள். ஆனால் தற்போதைய காலகட்டங்களில் கதாநாயகிகளே கவர்ச்சியாக நடிக்க தொடங்கி விட்டார்கள். ஆனால் என்னைப்போல நடிகைகள் கவர்ச்சியாக நடித்தால் மட்டும் தவறாக பேசுகிறார்கள்.

என்னுடைய தந்தை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது சிகிச்சை செலவுக்காக தான் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனக்கும் கவர்ச்சியாக நடிப்பதற்கு விருப்பமில்லை எனவும் நடிகை நீபா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.