ஹாஸ்பிடலில் திடீர் அட்மிட்! கையில் ஸ்ட்ரிப்ஸ்! டிவி நடிகை நீலிமாவுக்கு என்ன ஆச்சு?

நடிகை நீலிமா ராணி சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர்.


தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார். அதன்பின்னர் சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் .

தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் அவர் பல மெகா சீரியல்களில் நடித்துள்ளார். பவானி, செல்லமே, தென்றல், வாணி ராணி தலையணை பூக்கள் என பல மிகப்பெரிய சீரியல் தொடரில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தற்போது அரண்மனைக்கிளி என்னும் சீரியலில் நடித்து வருகிறார் .

சீரியலில் பிசியாக நடித்து வரும் நடிகை நீலிமா தற்போது ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி உள்ளார் . அவர் கையில் ஸ்ட்ரிப்ஸ் ஏறும் விதமான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக கொண்டிருக்கின்றது . இதனை பார்த்த நீலிமாவின் ரசிகர்கள் ஆச்சு அவருக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் தன் உடலுக்கு எதுவும் இல்லை என்றும் ரத்த தானம் செய்ய விரும்பியதாகவும் அதனால் ரத்த வங்கிக்கு சென்று ரத்தம் கொடுத்ததாகவும் நீலிமா கூறியுள்ளார். அனைவரும் தன்னைப் போல் உடனே ரத்தம் கொடுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.