தளபதி 63 பூஜை! நயன்தாராவால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்!

தளபதி 63 பட பூஜையின் போது நடிகர் விஜய்க்கு நயன்தாராவால் அவமானம் நேர்ந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.


   சர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த கண்டிசன்களுக்கு எல்லாம் தயாரிப்பாளரும், இயக்குனரும் ஒப்புக் கொண்ட பிறகே விஜயுடன் நடிக்க ஒப்புதல் தெரிவிக்கும் அக்ரிமென்டில் நயன்தாரா கையெழுத்திட்டார். இந்த நிலையில் தளபதி 63 படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது.

   வழக்கமாக விஜய் தனது பட பூஜையை எளிமையாக நடத்துவது வழக்கம். ஆனால் இந்த முறை சென்னையில் பிரமாண்டமாக பூஜை நடைபெற்றது. விஜய், அட்லி, தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ் கல்பாத்தி அகோரம் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் படத்தின் நாயகி நயன்தாரா மட்டும் கலந்து கொள்ளவில்லை. இது தான் தளபதி 63 படத்தின் பூஜையின் மிகப்பெரிய குறையாகிவிட்டது.

   வழக்கமாக விஜய் நடிக்கும் படங்களின் பூஜையில் நாயகிகள் தவறாமல் கலந்து கொள்வார்கள். மெர்சல் படத்தின் பூஜையின் போது காஜல் அகர்வால், சர்கார் படத்தின் பூஜையின் போது கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். ஆனால் தளபதி 63 படத்தின் பூஜையில் நாயகி பங்கேற்காதது தான் பரபரப்பாக பேசப்படுகிறது. இத்தனைக்கும் நயன்தாரா அட்லிக்கு மிக நெருக்கமான தோழி. அட்லி கூறியும் கூட பூஜைக்கு நயன்தாரா வரவில்லை.

   இதற்கு காரணம் படத்தில் தான் ஒரு நடிகை என்பதை தவிர வேறு எதுவும் இல்லை என்பதை ஸ்ட்ராங்காக படக்குழுவுக்கு உணர்த்தவே நயன்தாரா இப்படி ஒரு முடிவை எடுத்ததாக சொல்கிறார்கள். அதுவும் விஜயுடன் நயன்தாராவுக்கு எப்போதுமே சுமூகமான உறவு இருந்தது கிடையாது.குருவி படத்தில் நயன்தாராவை முதலில் ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு அவரை நீக்கிவிட்டு த்ரிஷாவை நடிக்க வைத்தார் விஜய்.

   அதன் பிறகு நயன்தாரா, பிரபுதேவாவுக்காகவே வில்லு படத்தில் நடித்தார். அதன் பிறகு நயன்தாரா விஜயுடன் சேர்ந்து நடிக்கவில்லை. ஆனால் அஜித்துடனும், விக்ரமுடனும், சூர்யாவுடனும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் அதிக சம்பளம், அட்லி ஆகியவற்றுக்காக நயன்தாரா விஜயுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். அதனால் பூஜையில் மட்டும் அல்ல பட விழாவில் கூட நயன்தாரா பங்கேற்பது சந்தேகம் என்கிறார்கள்.

   விஜய் போன்ற மிகப்பெரிய ஸ்டார் வேல்யூ உள்ள நடிகரின் பட பூஜைக்கு நாயகியான நயன்தாரா வராதது விஜய்க்கான ஒரு அவமானம் என்றே சினிமா வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.