அஜித் பட தயாரிப்பாளரை அமெரிக்காவில் ரகசியமாக சந்தித்த நயன்தாரா! இரவு விருந்தும் அமர்க்களம்! யார், ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.


தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்து இருந்தார் . தற்போது இந்த திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தர்பார் திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா நடித்துவருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா தன்னுடைய பிறந்த நாளை வரும் நவம்பர் மாதம் 18ஆம் தேதி கொண்டாட இருக்கிறார். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தன்னுடைய காதலரான விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு சென்றுள்ளனர். 

தல அஜித் வைத்து நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் கடந்த சில நாட்களாகவே நியூயார்க் நகரில் இருந்து வருகிறார் . அவரது இரண்டாவது மகள் குஷி கபூர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் படித்து வருவதால் தன் மகளைப் பார்ப்பதற்காக போனிகபூர் அமெரிக்கா சென்றுள்ளார் . இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து போனிகபூர் மற்றும் அவரது மகள் குஷி கபூரை சந்தித்து ஒன்றாக இணைந்து இரவு உணவில் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அஜித் திரைப்படம் தயாரிப்பாளருடன் ஏன் இந்த திடீர் சந்திப்பு என்று வினவி வருகின்றனர்.