காவி உடையில் விக்கி..! நெற்றியில் நாமத்துடன் நயன்தாரா! வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு ஐயா வைகுண்டசாமி தலைமைப்பதியில் பிரபல நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து சாமி தரிசனம் செய்தனர்.


தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நடிகை நயன்தாரா ஆவார். இவர் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் பகவதி அம்மன் வேடத்தில் நடித்துவருகிறார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. 

இந்த படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகை நயன்தாரா, அதே பகுதியில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக வெள்ளை ஆடையில் சென்றிருக்கிறார். மேலும் அவருடன் இயக்குனர் மற்றும் காதலரான விக்னேஷ் சிவனும் காவி உடை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

மேலும் அங்கு நடைபெற்ற ஏடு வாசிப்பு நிகழ்ச்சியிலும் நடிகை நயன்தாரா பங்கேற்றார். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வழங்கப்பட்டது. நடிகை நயன்தாரா மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. கோயிலுக்கு வந்த நடிகை நயன்தாராவை காண்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது அங்கே எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.