முன்னழகை டச் செய்யும் காட்சி..! சிக்கிய காஜல்..! ஆனால் நயன்தாரா?

முன்னழகை டச் செய்யும் காட்சிகளில் நடிகை நயன்தாரா நடிக்க மறுத்ததால் தான் குயின் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகை காஜல் அகர்வால் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் மத்தியில் அன்பாக அழைக்கப்படும் நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதை தனது வழக்கமாக கொண்டிருக்கிறார். சினிமா துறையை பொறுத்த வரையில் ஆண்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பெண்களால் துறையில் நீடித்து நிலைத்து நிற்பது கடினம். ஆனால் அந்தக் கோட்பாட்டை தகர்ததெரிந்தவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. நல்ல கதாபாத்திரங்களையும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ரோல்களையும் தேடி தேடி நடிப்பதில் நடிகை நயன்தாரா வல்லவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். 

இதனால் தான் அவர் இன்றும் தமிழ் சினிமாவின் வெற்றி நாயகியாக வலம் வருகிறார். ஹிந்தி சினிமாவில் வெளியான குயின் என்ற திரைப்படம் மாபெரும் வசூலை பெற்றது. இத்தகைய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கு திட்டமிட்ட பொழுது அதில் நடிப்பதற்கு முதலில் நடிகை நயன்தாராவை தான் படக்குழுவினர் கேட்டுள்ளனர். ஆனால் அந்த திரைப்படத்தில் முன்னழகை டச் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் தன்னால் அதில் நடிக்க இயலாது என்று நடிகை நயன்தாரா மறுத்து விட்டாராம். இதற்குப் பின்புதான் நடிகை காஜல் அகர்வாலை படக்குழுவினர் நடிக்க வைத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குயின் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், கன்னடத்தில் பருல் யாதவும் மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் நடித்துள்ளனர். தமிழில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு படத்தின் டீசரும் வெளியானது. அந்த டீசரில் நடிகை காஜல் அகர்வாலின் முன்னழகை அவரது தோழி அழுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெறும். இந்த டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.