அந்த மாதிரி பிரச்சனைகள் வந்தது..! அதனால் தான்..! 10 ஆண்டுகளுக்கு பிறகு மவுனம் உடைத்த நயன்தாரா!

நடிகை நயன்தாரா பத்து வருடத்திற்கு பிறகு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டியில் ஏன் இவ்வளவு நாட்கள் பொது விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்தேன் என்ற காரணத்தையும் கூறியுள்ளார் .


தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் நடித்த அறம் மற்றும் கோலமாவுகோகிலா ஆகிய படங்களில் முன்னணி கதாநாயகர்கள் இடம் பெறாவிட்டாலும் கூட, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்ததால் இந்த இரண்டு படங்களும் மிகப் பெரிய ஹிட் ஆகியது.

நடிகை நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் . மேலும் நடிகர் விஜயுடன் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்த பிகில் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ஆனால் சில காலங்களாகவே நடிகை நயன்தாரா இவர் நடித்து வரும் திரைப்படங்களுக்கு சம்பந்தமான விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இதனால் நயன்தாராவைப் பற்றி பல்வேறு சர்ச்சைகளும் வெடித்தன.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தற்போது ஏன் இவ்வளவு நாட்கள் விழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தேன் என்ற காரணத்தை கூறியுள்ளார்.நான் என்ன நினைக்கிறேன் என்று இந்த உலகம் தெரிந்து கொள்வதை நான் விரும்பவில்லை. திரைப்படங்களில் நடிப்பது மட்டுமே என்னுடைய வேலை.

சில சமயங்களில் நான் பேசிய விஷயங்கள் தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டன. இது போன்ற பிரச்சினைகளை கையாளுவதில் எனக்கு சிரமமாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் நான் இவ்வளவு நாட்கள் எந்தப் பேட்டியும் கொடுக்காமல் மற்றும் எந்த பொது விழாக்களிலும் பங்கு கொள்ளாமல் இருந்ததாகவும் நடிகை நயன்தாரா கூறியுள்ளார் .