வயிற்றில் குழந்தை! சடலமாக கணவன்! கதறித் துடித்த நடிகை மேக்னா ராஜ்! இதயத்தை நொறுங்கச் செய்த காட்சி!

பிரபல தமிழ் நடிகை மேக்னா ராஜ் 4 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் அவரது கணவர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் மரணம் அடைந்த தகவலை அறிந்து நடிகை மேக்னா ராஜ் கதறி அழுத சம்பவம் இதயத்தை நொறுங்க வைத்துள்ளது.


கன்னட திரையுலகில் முன்னணி இளம் கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா. இவருக்கு வயது 39. நடிகர் சிரஞ்சீவி சர்ஜா இதுவரை 22 கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவி பெயர் மேக்னா ராஜ். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2018 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த அவர் தற்போது மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று மதியம் 1:10 மணி அளவில் சிரஞ்சீவி சர்ஜா தனது தந்தையுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள சாகர் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். 

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா பிரபல தமிழ் நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜாவின் சடலத்தை கண்டு நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவி நடிகை மேக்னா ராஜ் கதறி அழுத காட்சி காண்போரின் இதயத்தை நொறுங்க செய்துள்ளது.