அக்சரா ஹாசன், ஹன்சிகா மோத்வானியை தொடர்ந்து மேகா ஆகாஷ்! பதற்றத்தில் நடிகை!

பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை மேகா ஆகாஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கினர்.


அண்மையில் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள் அந்த நடிகை உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். 

இதேபோல் கமல்ஹாசனின் மகளான அக்ஷரா ஹாசனின் இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வளர்ந்து வரும் நடிகையான மேகா ஆகாஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை மேகா ஆகாஷ். தெலுங்கு திரையுலகில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கிய இவர் அண்மையில் வெளியான சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.  

சுந்தர் சி இயக்கி சிம்பு நடித்து வெளியாகியிருக்கும் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 7 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகுந்து மர்ம நபர்கள் சிலர் விளையாடியுள்ளனர். 

நடிகையின் பெயர் மற்றும் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. மேகாவின் புகைப்படத்துக்கு பதிலாக ரஷ்யாவின் டிஜேவாக உள்ள டம்லா என்ற பெண்ணின் புகைப்படமும் அவரது பெயரும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் இது குறித்து அந்த நடிகை காவல் துறையில் எந்த புகாரும் அளிக்கவில்லை. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

அதிலிருந்து வரும் தகவல்களை தவிர்க்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தனது குழு ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்றும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

பொதுவாக நடிகைகள் தங்களது செல்போனில் தங்களின் அந்தரங்க புகைப்படங்களை சேமித்து வைத்திருப்பர். அதனை ஹேக் செய்து தான் அக்சரா ஹாசன் மற்றும் ஹன்சிகாவின் ஆபாச புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் மேகா ஆகாசின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதால் அந்த நடிகை பதற்றத்தில் உள்ளார்.