வயசு தான் 43..! மீனா வெளியிட்ட இளசுகளை ஏங்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..!

பிரபல நடிகை மீனா தற்போது உள்ள இளம் நடிகைகளுடன் போட்டி போடும் வகையில் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், அஜித், கார்த்திக், சத்யராஜ் போன்ற பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் ஹீரோயினாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா ஆவார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் எண்ணற்ற திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிகை மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பல வருடங்களுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிகை மீனா அண்ணாத்த திரைப்படத்தில் சேர்ந்து நடிப்பது அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆகையால் பெரும்பாலான நடிகைகள் தங்களது துரோபேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. 


அந்த வகையில் நடிகை மீனா இளம் நடிகைகளுடன் போட்டி  போடும் வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அவரது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது