விபத்தில் சிக்கிய நடிகை மஞ்சிமா மோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய பிரபல நடிகை..! கால்கள் உடைந்த பரிதாபம்..! வெளியான அதிர்சசி புகைப்படம்..!
அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக வலம்வந்த மஞ்சிமா மோகன் தன்னுடைய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழிலும் தன்னுடைய நடிப்பின் மூலம் நல்ல பெயரை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பின்பு சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகை மஞ்சிமா மோகன் எப்பொழுதுமே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை ஆவார். ஆனால் சமீப காலமாகவே தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் எந்த ஒரு பதிவும் போடாமல் இருந்து வந்தார் நடிகை மஞ்சிமா. இந்நிலையில் தற்போது நடிகை மஞ்சிமா மோகன் வெளியிட்ட பதிவானது அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பதிவில் நடிகை மஞ்சிமா மோகன் தனக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டதாகவும் அதனால் அதிலிருந்து மீள்வதற்காக ஓய்வு எடுத்துக்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். விபத்தில் சிக்கிய மாமாவிற்கு கால்களில் அடிபட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதனை பார்த்த மஞ்சிமாவின் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாகி ஒரு நல்ல உடல் நலத்தை பெற வேண்டுமென்று சமூகவலைத்தளத்தில் அம்மன் செய்த வண்ணம் உள்ளனர்.