முழுமையாக தலைமுடியை மழித்து மொட்டை..! விஷால் பட நடிகைக்கா இந்த நிலை?

பிரபல நடிகை மம்தா மோகன்தாஸ் மொட்டை தலையுடன் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்த சிவப்பதிகாரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ். அதன்பிறகு குரு என் ஆளு,  தடையறத்தாக்க போன்ற சில தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தார். ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். 

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அதன் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மம்தா மோகன்தாஸ் புற்றுநோயில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து தற்போது திரைப் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

தமிழில் ஊமை விழிகள் மற்றும் உள்ளே வெளியே 2 போன்ற திரைப் படங்களிலும் மலையாளத்தில் சில திரைப்படங்களிலும் இவர் தற்போது நடித்து வருகிறார். இவர் சிகிச்சை பெற்று வந்த போது எடுக்கப்பட்ட மொட்டை தலையுடனான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரது புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி விட்டீர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.