கருப்பாக இருந்ததால் 14வயதிலேயே எனக்கு கிடைந்த அந்த அனுபவம்..! மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!

14 வயதில் தான் நிறவெறியை சந்தித்ததாக மாஸ்டர் திரைப்பட நாயகி மாளவிகா மோகனன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் இந்த திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை மாளவிகா மோகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் ஒரு பதிவு சமூகவலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்காவை சேர்ந்த கருப்பின நபரான ஜார்ஜ் பிளாயட் நிறவெறி காரணமாக போலீசாரால் அநியாயமாக கொல்லப்பட்டார்.

இதன் தாக்கம் உலகெங்கிலும் பல இடங்களில் பிரதிபலித்து உள்ளது. அமெரிக்காவிலும் தொடர்ந்து கருப்பினத்தவர்க்கு எதிராக நடைபெறும் இம்மாதிரியான செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதேபோல் திரைத்துறையினரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட நிறவெறி குறித்த விஷயங்களை தங்களது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடைபெ நடிகை மாளவிகா மோகனன் தன்னுடைய 14 வயதில் தான் சந்தித்த நிறவெறி பிரச்சினை பற்றி மனம் திறந்து கூறியிருக்கிறார்.

அப்போது எனக்கு 14 வயது இருக்கும். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அழகிய மகாராஷ்டிரா பையன். நான் மாநிறம் கொண்ட மலையாளி. என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரை அவரது தாயார் டீ குடிக்க எப்பொழுதுமே அனுமதிக்கமாட்டார். ஏனெனில் டீ குடித்தால் தோலின் நிறம் கருப்பாகி விடும் என்று அவர் நம்பினார். ஒரு நாள் நானும் எனது நண்பரும் அவரது வீட்டில் இருந்த பொழுது என் நண்பர் அவரது தாயாரிடம் டீ கேட்டார். அதற்கு உடனே அவரது தாயார், உடனே என்னை காண்பித்து நீ டீ குடித்தால் அவளை போல் கருப்பாக மாறி விடுவாய் என்று கூறினார். இது எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது. 

இதுவரை என்னுடைய நிறத்தை ஒப்பிட்டு யாரும் பேசியது கிடையாது. ஆகையால் நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். நமது சமுதாயத்தில் நிறபேதம் மதவாதம் என்பது மிகவும் சாதாரணமாகப் புழக்கத்தில் இருப்பதை நான் அன்று தான் தெரிந்து கொண்டேன். கருப்பாக இருந்தால் காலா என்றும் மதராசி என்றும் வட இந்தியர்கள் அழைப்பதை தங்களுடைய பழக்கமாகக் கொண்டுள்ளனர். தென் இந்தியர்கள் என்றாலே கருப்பாக தான் இருப்பார்கள் என்று அவர்கள் கருதுகின்றனர். கருப்பினத்தவர்கள் அனைவரும் நீக்ரோக்கள் என்றும் வெள்ளையாக இருப்பவர்கள் மட்டும் தான் அழகு என்றும் கருதுவது நம்முடைய சமுதாயத்தில் நிலவிவரும் கருத்தாக இருக்கிறது. 

இனவெறி மற்றும் மதவெறி ஆகியவற்றை நாம் ஒழிப்பதற்கு அன்றாடம் மிகவும் பாடுபட வேண்டும். சொல்லப்போனால் அன்பான நபராக நீங்கள் இருந்தால் உங்களை அதுவே அழகாக மாற்றி விடும்.. ஆகையால் உடலின் நிறம் எப்பொழுதும் உங்களை அழகாக காண்பிக்காது என்று நடிகை மாளவிகா மோகனன் அந்த பதிவில் கூறியிருக்கிறார். நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.