அண்ணியின் கர்ப்பத்தை கலைக்க விஷம்..! மைனாவின் 2வது கணவராகப்போகும் நடிகரை விளாசும் ரசிகர்கள்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மனதில் பிரபலமானவர் நடிகை நந்தினி.


சரவணன் மீனாட்சி தொடரில் நடிகை நந்தினி மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் பின்பு சூரிக்கு ஜோடியாக வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஜிம் மாஸ்டரான கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி ஒரு சில மாதங்களிலேயே கார்த்திகேயன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒருசில தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நந்தினியின் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த பரபரப்பு அடங்கிய சிலநாட்களிலேயே நடிகை நந்தினி மீண்டும் சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்

தற்போது பல சீரியல்களில் பிசியாக நடித்து வரும் இவர் மீண்டும் சீரியலில் நடிக்கும் யோகேஷ் என்பவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடிய விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டு வருகிறது. 

நடிகை நந்தினி காதலிக்கும் நடிகர் யோகேஷ் வேறு யாருமில்லை பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நாயகி சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கோபி தான். கோபியும் மைனா நந்தினியும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக கூறியுள்ளனர். நட்பாக ஆரம்பித்த இவர்களது உறவு தற்போது காதலாக மாறியுள்ளது.

கூடிய விரைவில் இவர்கள் திருமணம் பந்தத்திலும் நிறைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நாயகி சீரியலில் கோபி மிகவும் வில்லத்தனமான கேரக்டரில் நடித்து வருகிறார். சீரியலில் தனக்கு அண்ணியாக நடித்து வருபவருக்கு எதிராக சதி செய்துஅவர் கர்ப்பத்தை கலைக்கும் அளவிற்கு கொடூரமான கேரக்டர்.

இதனால் கோபியை பார்த்து பலரும் திட்டித் தீர்க்கின்றனர். ஆனால் இதெல்லாம் வெறும் நடிப்பு என்று கூறி திருதிருவென விழித்துக் கொண்டிருக்கிறார் கோபி.