சிவகாமி சீரியல் மகாலெட்சுமிக்கு திடீர் கல்யாணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழியில் வெளியாகும் சின்னத்திரையில் நடித்து பிரபலமான நடிகை மகாலட்சுமி தனது நீண்டநாள் காதலரை கரம் பிடித்துள்ளார்.


தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவர் தெலுங்கு திரையுலகில் வெளியான அர்த்தநாரி என்ற திரைப்படத்தில் திருநங்கையாக நடித்தது மிகவும் பாராட்டப்பட்டார் . மேலும் சிவகாமி என்னும் சீரியலின் மூலம் பல ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் ஆவர்.

நடிகை மகாலட்சுமி நீண்டகாலமாகவே நிர்மல் கிருஷ்ணா என்பவரை உயிருக்குயிராக காதலித்து வந்தார் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் கோலாகலமாக நடைபெற்றது . இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பல திரைப்பிரபலங்கள் முன் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

நடிகை மஹாலட்சுமி மற்றும் நிர்மல் கிருஷ்ணா ஆகியோரது திருமணம் வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது . மேலும் இவர்களது ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.