பேட்டியின் போது ஆண் தொகுப்பாளரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த லைலா!

பேட்டி எடுத்த ஆண் தொகுப்பாளரை பேட்டியின் போதே நடிகை லைலா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.


இந்தி, தெலுங்கு, மலையாளத்தில் நடித்து வந்த லைலா விஜயகாந்தின் கள்ளழகர் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுடன் நடித்து ஒரு ரவுண்ட் வந்தார். அஜித்தின் தீனா, விக்ரமுடன் தில் ஆகிய படங்களில் லைலாவின் நடிப்பு பேசப்பட்டது. ஷங்கரின் முதல்வன் படத்திலும் சிறிய கேரக்டரில் லைலா நடித்திருப்பார்.

   பிதாமகன், நந்தா என அடுத்தடுத்து இயக்குனர் பாலா படங்களில் நடித்த லைலாவுடன் இணைத்து இயக்குனர் பாலாவை கிசுகிசுத்தனர். இருவரும் காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும் பேசப்பட்டது. ஆனால் லைலாவோ அஜித்துடன் பரமசிவன் படத்தை நடித்ததோடு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு சென்றார். திருப்பதி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

   இதன் பிறகு மெஹிதீன் எனும் தொழில் அதிபரை திருமணம் செய்த கொண்டு 2006ம் ஆண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது குழந்தை குட்டி என மும்பையில் உள்ள லைலாவுக்கு மீண்டும் நடிக்கும் ஆசை வந்துள்ளது. இதனால் சென்னைக்கு வந்த அவர் பிரபல ஆன்லைன் தொலைக்காட்சிகளை நேரடியாக தொடர்பு கொண்டு பேட்டி அளித்து வருகிறார்.

   அந்த வகையில் ஒரு ஆன்லைன் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது எங்களது  தொகுப்பாளரை கட்டி முடிக்க முடியுமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் தயங்காமல் அந்த தொகுப்பாளரை கட்டி அணைத்தார் லைலா. அத்தோடு நிற்கவில்லை முத்தம் கொடுக்க முடியுமா என்று கேட்க சிறிதும் சங்கோஜப்படாமல் தொகுப்பாளருக்கு முத்தம் கொடுத்து அசத்தினார் லைலா.

   லைலா தொகுப்பாளருக்கு முத்தம் மற்றும் கட்டி அணைத்த வீடியோ தான் தற்போது யூட்யூபில் வைரல் ஆகி வருகிறது. இப்படியே தாராள மனதோடு இருந்தால் லைலா நிச்சயமாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்கிறார்கள்.