முதலில் பிரபு! பிறகு தான் சுந்தர் சி! குஷ்பு வெளியிட்ட சீக்ரெட்!

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.


நடிகை குஷ்பு மற்றும் நடிகர் பிரபுவும் இணைந்து சின்னத்தம்பி, தர்மத்தின் தலைவன், பாண்டித்துரை என பல திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். நடிகர் பிரபுவும் குஷ்புவும் காதலித்து வருவதாகவும் அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் அப்போது கிசுகிசுக்கள் வெளிவந்தன.

ஆனால் இவர்கள் இருவரின் காதலுக்கு சிவாஜிகணேசன் ஒப்புக் கொள்ளாத காரணத்தால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்குப் பின்புதான் குஷ்பு , இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

இதனைப் பற்றி நடிகை குஷ்புவே வெளிப்படையாக கூறியுள்ளார். ஆம் நானும் நடிகர் என்ற பிரபுவும் ஒருவரை ஒருவர் மனதாரக் காதலித்தோம். அது என் வாழ்வில் மிக அருமையான தருணமாக காணப்பட்டது. ஆனால் அது நீடித்து நிற்கவில்லை , அது அப்போதே முடிந்துவிட்டது . அதற்குப் பின் மீண்டும் எனக்கு கிடைத்த அழகிய வாழ்வு தான் சுந்தர் .சியுடன் இப்போது நான் வாழும் வாழ்க்கை .

இதுதான் நிஜம் என்று கூறினார். மேலும் நடிகர் பிரபுவிற்கு, பேரன் , பேத்தி என பல உறவுகள் இருக்கும் இந்நிலையில் அவரை இதைப் பற்றி பேசி அவரை சங்கடப்படுத்த எனக்கு விருப்பமில்லை. அது மட்டுமில்லாமல் எனக்கும் 18 வயதில் மகள் இருக்கிறாள் நானும் சுந்தர் .சியும் இணைந்து மிகவும் அன்பான வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு சுந்தர் .சி முதன்முதலாக என்னிடம் தன்னுடைய காதலைப் பற்றி ப்ரொபோஸ் செய்தார். அதற்குப் பின்பு சுந்தர் .சீ அவர்களின் காதலை நான் மனதார ஏற்றுக் கொண்டேன். அதற்குப் பின்பு சுந்தரியும் நானும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். இப்போது நாங்கள் இருவரும் எங்களுடைய இரண்டு மகள்களுடன் மிகவும் சந்தோஷமாக எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூறி இந்த உரையாடலை முடிவு செய்தார் நடிகை குஷ்பூ.

நீண்ட நாட்களுக்கு முன்னர் குஷ்பு அளித்த பேட்டி தற்போது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.