நடிகர் கமலால் 2 வருடங்கள் சுந்தர் சி பட்ட கஷ்டம்..! ஏற்பட்ட நிலை..! வேதனையுடன் குஷ்பு கூறிய உண்மை! இப்படி எல்லாமா நடந்தது?

நடிகர் கமலால் இரண்டு வருடங்கள் இயக்குனர் சுந்தர்.சி பல கஷ்டங்களை அனுபவித்தார் என்று நடிகை குஷ்பு கவலையுடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் உண்மை தகவலை பகிர்ந்திருக்கிறார்.


சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரையில் நல்ல கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால் நல்ல கதை களமாக இருந்தாலும் அந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறுவதில்லை. இதனால் அந்தத் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர், தயாரிப்பாளர் உட்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதே மாதிரி சூழ்நிலை தான் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருந்த அன்பே சிவம் திரைப்படத்திற்கும் நிகழ்ந்துள்ளது.

நல்ல கதை சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் சினிமா தியேட்டர்களில் சரியாக ஓடவில்லை. ஆகையால் திரைப்படக்குழுவினர் எதிர்பார்த்த அளவிற்கு வசூலையும் பெறவில்லை. இது இந்தத் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுந்தர்.சிக்கு மிகப்பெரிய அடியாக அமைந்தது. இதனால் அவர் பெருந்துயர் அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. சினிமா தியேட்டர்களில் சரியாக ஓடவில்லை என்றாலும் டிவியில் இந்த படம் போடப்பட்ட பொழுது படத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறியவர்கள் பலபேர் என்றுதான் கூறவேண்டும்.

 அத்தகைய சிறப்பு மிக்க கதையை அழகாக கண்முன் நிறுத்திய இந்தத் திரைப்படம் IMDB இணையதளத்தில் தமிழ் திரைப்படங்களில் வரிசையில் அதிக ரேட்டிங் பெற்று முதன்மை வகித்து வருகிறது என்று உலக நாயகன் கமலஹாசனின் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய கருத்தை பகிர்ந்திருந்தார். இதனைப் பார்த்த நடிகை குஷ்பூ, ஒருவேளை இந்த திரைப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெற்று இருந்தால் என்னுடைய கணவர் இரண்டு வருடங்கள் வீட்டில் இருக்கவேண்டிய நிலை உருவாகி இருக்காது என்று கூறியிருந்தார்.

தற்போது நடிகை குஷ்பூ அன்பே சிவம் திரைப்படத்தை பற்றி வெளியிட்டு இருக்கும் பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.