அம்மா கட்டிய சேலை! உடல் எடை கிடுகிடு குறைப்பு! மலைக்க வைக்கும் தோற்றத்தில் குஷ்பு மகள்!

பிரபல நடிகை குஷ்புவின் இளைய மகள் உடல் எடையை கிடு கிடுவென குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மலைக்க வைக்கும் தோற்றத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


1990 களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் நடிகர் ரஜினிகாந்த், கமல் ,பிரபு ,சத்யராஜ் ,கார்த்திக் போன்ற பல்வேறு கதாநாயகர்களுடன் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக வலம் வந்தார். இவர் கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை குஷ்புவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதா சில வருடங்களுக்கு முன்பு நடிகை குஷ்புவை விட மிகவும் குண்டாக காணப்பட்டார். இதனால் குஷ்புவின் இளைய மகள் அனந்திதா பல மருத்துவமுறைகளை தீவிரமாக கையாண்டு தனது கடின முயற்சியால் உடல் எடையை குறைத்து தற்போது ஸ்லிம்மாக இருக்கிறார். இதன் காரணமாக உடல் எடை குறைத்த புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவதில் இவர் ஆர்வமாக இருந்தார்.

அந்த வகையில் நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதா புடவையுடன் மிகவும் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அழகில் உங்கள் அம்மாவையே நீங்கள் மிஞ்சிவிட்டீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதா உடல் எடை குறைத்து புடவையில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.