காதலனுடன் அந்தரங்க வாழ்க்கை..! வெளியான பிரபல நடிகர் தங்கையின் நெருக்கமான புகைப்படங்கள்..! யார் தெரியுமா?

ஜாக்கி மற்றும் ஆயிஷா ஷிராப்பின் மகள் மற்றும் நடிகர் டைகர் ஷிராப்பின் சகோதரி கிருஷ்ணா ஷிராஃப், தற்போது தன் காதலனுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கி கொண்டிருக்கிறார்.


ஜாக்கி மற்றும் ஆயிஷா ஷிராப்பின் மகள் மற்றும் நடிகர் டைகர் ஷிராப்பின் சகோதரி கிருஷ்ணா ஷெராஃப். நடிகை கிருஷ்ணா ஷெராஃப், எபன் ஹைம்ஸ் என்பவரை காதலித்து வருகிறார். தன் சகோதரன் டைகர் ஷெராப் போலவே இவருக்கு உடற்பயிற்சியின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. இவர் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் பிகினி புகைப்படங்கள் ஆகியவற்றை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வைரல் ஆக்குவதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் நடிகர்-நடிகைகள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். ஊரடங்கு உத்தரவால் மும்பை வீட்டில் முடங்கி இருந்த நடிகை கிருஷ்ணா தனது காதலரான எபன் ஹைம்ஸ் உடன் இணைந்து சிறிது காலம் தங்கியிருந்தார். அதற்குப் பின்பு எபன் ஆஸ்திரேலியாவிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் காதலரைப் பிரிந்து வாழும் நடிகை கிருஷ்ணா ஷெராப் அவரது நினைவாக இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில், கிருஷ்ணாவும் ஈபனும் ஒருவருக்கொருவர் முத்தமிடுவதைக் காணலாம், மற்றொன்றில், அவர்கள் இருவரும் இணைந்து ஒர்க்அவுட் அமர்வில் அவர்கள் கழித்த வேடிக்கையான நேரத்தை காணலாம். மற்றுமொரு புகைப்படத்தில் இந்த ஜோடி நீச்சல்குளத்தில் இணைந்து ஜாலியாக தங்களது நேரத்தை கழிப்பதை காணலாம். 

சமீபத்தில் தான் நடிகை கிருஷ்ணா ஷெராப் கருப்பு நிற பிகினி ஆடை புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனார். மீண்டும் நடிகை கிருஷ்ணா ஷராஃப், தன் காதலனுடன் இணைந்து நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டுகளாக பதிவு செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.