வயசானா என்ன? நான் இப்படித்தான்..! போதை ஏற்றும் ஓ போடு நடிகை..!

பிரபல நடிகை கிரண் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ்,தெலுங்கு ,மலையாளம், கன்னடம் ,இந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து சீனியர் நடிகையாக வலம் வருபவர் நடிகை கிரண் ஆவார். தமிழ்சினிமாவில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வின்னர்,தென்னவன், அன்பே சிவம் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன்பிறகு குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் ஒரு பாடலில் நடனம் ஆடுவது போன்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார்.

தற்போது அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து உள்ளதால் அதை பெருக்கும் வகையில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருவதை நடிகை கிரண் வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்தவகையில் நடிகை கிரண் தற்போது ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகை கிரண் கருப்பு நிற குட்டியான டாப் செய்ய அணிந்து கொண்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு கவர்ச்சிகரமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார். 

இதை கண்ட நெட்டிசன்கள் பல்வேறு விதமாக நடிகர் கிரணை கமெண்ட் செய்து வருகின்றனர். அதிலும் ஒருசில நெட்டிசன்கள் , மேடம் உங்கள் ஆடைகளில் சற்று கவனம் செலுத்துங்கள் என்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். இருப்பினும் எதையுமே கண்டு கொள்ளாத நடிகை கிரண் தன்னுடைய பாணியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ச்சி கடலில் மூழ்கடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.