6 மாசம்..! ரொம்ப கஷ்டப்பட்டு தான் அதை செய்தேன்..!17 வருடங்களுக்கு பிறகு சீனியர் நடிகை வெளியிட்ட ரகசியம்!

நடிகை கிரண் வின்னர் திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு சுமார் 6 மாத காலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு தான் பிகினி உடையில் நடித்ததாக 17 ஆண்டுகாலம் கழித்து தன்னுடைய ரசிகர்களுடன் இந்த ரகசிய தகவலை பகிர்ந்திருக்கிறார்.


தமிழ்,தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து சீனியர் நடிகையாக வலம் வருபவர் நடிகை கிரண் ஆவார். தமிழ்சினிமாவில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வின்னர்,தென்னவன், அன்பே சிவம் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன்பிறகு குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் ஒரு பாடலில் நடனம் ஆடுவது போன்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார்.

தற்போது அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து உள்ளதால் அதை பெருக்கும் வகையில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருவதை நடிகை கிரண் வழக்கமாக கொண்டிருக்கிறார். நடிகை கிரண் நடிப்பில் வெளியான வின்னர் திரைப்படம் அவரது திரை வாழ்க்கையில் நல்ல பெயரை அவருக்கு பெற்று தந்தது. அந்த திரைப்படத்தை இயக்குனர் சுந்தர். சி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் எந்தன் உயிர் தோழியே என்ற பாடல் இடம்பெறும். இந்த பாடலில் வரும் காட்சிகளில் நடிகை கிரண் பிகினி உடையில் வலம் வந்து இருப்பார்.

இந்த பிகினி உடையை தான் அணிய வேண்டும் என்பதற்காக சுமார் 6 மாத காலங்கள் படக்குழுவினர் தன்னை அணுகியதாக நடிகை கிரண் கூறியிருக்கிறார். மேலும் அவர்களுடைய வற்புறுத்தலின் பேரில் தான் அவர் அந்த பாடலில் பிகினி உடை அணிந்ததாகவும் கூறியிருக்கிறார். தன்னுடைய உடல் எடையை சற்று கூடி இருந்தமையால் அவர் அந்த உடையை அணிவதற்கு தங்கியதாகவும் நடிகை கிரண் கூறியிருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்பாக நடிகை கிரண் வெளியிட்டுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.