மியுசிக் டைரக்டர் இமானுடன் நிறைவேறாத என் ஆசை..! 10 ஆண்டு ரகசியத்தை வெளியே சொன்ன கஸ்தூரி!

பிரபல நடிகை கஸ்தூரி இசையமைப்பாளர் இமானுடனான தனது பத்து வருட நிறைவேறாத ஆசையை கூறியுள்ளார்.


ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கியவர் நடிகை கஸ்தூரி.  இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார்.நடிகை கஸ்தூரி ட்விட்டரில் அரசியல் உட்பட எல்லா பிரச்சனைகளைப் பற்றியும் தைரியமாக பேசுவதைை வழக்கமாக கொண்டவர்.நடிகை கஸ்தூரி சமீபத்தில் இசையமைப்பாளர் இமானுடன் கடந்த பத்து வருடங்களாக தனது நிறைவேறாத ஆசையை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதவில் அவர் பத்து வருடங்களுக்கு முன் நான் நடனம் ஆடிய குத்துவிளக்கு என்ற பாடல் இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த நேரத்தில் மற்றுமொரு புதிய படத்தில் நடனமாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் அனைவரும் புதுமுகங்களாகவே இருந்ததால் எனக்கு அந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட விருப்பமில்லை.

அந்த படத்தின் தயாரிப்பாளர் பாட்டை ஒருமுறை கேளுங்களேன், கேட்டு விட்டு சொல்லுங்கள் என்று என்னிடம் கூறினார். நானும் யார் இசையமைப்பாளர் என்று கேட்டேன். அதற்கு அவர் இமான் என்று பதிலளித்தார். அந்த காலகட்டத்தில் இமான் இசையில் வெளிவந்த மைனா திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பட்டையை கிளப்பி வந்தது. ஆகையால் இமான் இசை என்று சொன்னவுடன் அந்த பாட்டில் நடனமாட எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகரித்தது. பின்னர் அந்த பாடலை நான் கேட்டேன். அந்த பாடலை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இசை,குரல் ,வரிகள் எல்லாம் ஒன்றுக்கொன்று போட்டி யிட்டு செம கிக்கான பாடலாக அது இருந்தது.

உடனே அந்தப் பாடலில் நடனமாட நான் ஒப்புக் கொண்டேன். பின்னர் அந்த பாடல் படமாக்கப்பட்டது. நான் நடனமாடிய பாடல்களிலேயே அந்தப் பாடலில் தான் நான் மிகவும் நன்றாக நடனம் ஆடியதாக எண்ணினேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த திரைப்படம் திரையில் ரிலீசாகவில்லை. ஆகையால் இசையமைப்பாளர் இமான் பாடலில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு முழுமையாக நிறைவேறவே இல்லை. இவ்வாறு நடிகை கஸ்தூரி கடந்த பத்து வருடங்களாக இசையமைப்பாளர் இமானுடனான தனது நிறைவேறாத ஆசையை பற்றி கூறியுள்ளார்.