எனக்கும் திருமாவுக்கும் இடையே விரிசல் ஏற்படுத்த பாக்குறாங்க..! கதறும் கஸ்தூரி!

தன்னை பட்டியல் இனத்தவருக்கு எதிரானவராக சித்தரிக்கிறார்கள் என்று நடிகை கஸ்தூரி தற்போது சமூக வலைத் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.


சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இந்து மதத்தைப் பற்றியும் இந்து மத கோவில்களைப் பற்றியும் ஆபாசமாக சித்தரித்தார்.

இதனை அடுத்து இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு நிலவியது . இந்த எதிர்ப்பை அடுத்து திருமாவளவன் தான் பேசியது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார். இருப்பினும் பலரும் திருமாவளவனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை கஸ்தூரி இந்துக் கோயில்களை பற்றி திருமாவளவன் கூறிய தவறான விமர்சனத்திற்கு தன்னுடைய கருத்தினை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த விடுதலை சிறுத்தை கட்சியினர் நடிகை கஸ்தூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த எதிர்ப்பை கண்டித்து நடிகை கஸ்தூரி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகை கஸ்தூரி, விடுதலை சிறுத்தை கட்சியில் இருக்கும் பல நண்பர்களுக்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

வி.சி. கட்சியை சேர்ந்த சிலர் என்னை சமூக வெளியில் தாக்கியும் பொய் பிரசாரங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். போலீசில் பொய் புகாரும் அளித்துள்ளனர். திருமாவளவனுக்கும் எனக்கும் விரிசலை ஏற்படுத்தவும் பட்டியலினத்தவருக்கு நான் எதிரானவள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் முயல்கின்றனர்.

எந்த ஒரு தனி நபரையோ சாதியையோ மதத்தையோ குறிப்பிட்டு நான் பதிவிடவில்லை. இப்படி இருக்க என் மீது ஆதாரமற்ற புகார் அளிப்பது சரியல்ல .அந்த புகாரை நான் எப்படி சந்திப்பது எனவும் எனக்கு நன்றாக தெரியும் என்று நடிகை கஸ்தூரி அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.