பிக்பாஸ் வீட்டில் இருந்து துரத்தப்பட்ட சரவணன்! காரணம் நடிகை கஸ்தூரி! சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக பிரபல நடிகை பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் சில  தவிர்க்க முடியாத காரணங்களினால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் .

16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் அவர்களையும்  சேர்த்து 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் . இந்நிலையில் கடந்த 2 சீசன்களை போலவே இந்த சீசனிலும் வைல்ட் கார்ட் என்று மூலம் யார் பிக்பாஸ் வீட்டிற்குள்  நுழைவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது . 

இந்நிலையில் நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது . கடந்த இரண்டு சீசன்களாக கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்து. ஆனால் அதனை மறுத்த அவர் இந்த முறை ஓகே சொல்லிவிட்டாராம்.

மேலும் சரவணன் பெண்களை பற்றி தவறாக பேசிய போதே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவருக்கு நிகரான போட்டியாளர் கிடைத்த பிறகு அவரை வெளியேற்ற முடிவு எடுத்து தற்போது கஸ்தூரி ஓகே சொன்னவுடன் சரவணனை வெளியே அனுப்பியிருக்கிறார்கள்.