எங்க தொகுதியில அந்த நடிகை தான் போட்டியிடனும்! அடம் பிடிக்கும் தொண்டர்கள்!

தங்கள் தொகுதியில் அந்த நடிகை தான் போட்டியிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அடம் பிடித்து வருகின்றனர்.


மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் 1984ஆம் ஆண்டு முதல் ஒருமுறை கூட காங்கிரஸ் வெற்றி பெற்றதில்லை. ஆனால் இந்த முறை அந்த தொகுதியை கைப்பற்றியே தீரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக அந்தத் தொகுதியில் நடிகை கரீனா கபூரை நிறுத்தலாம் என்று அக்கட்சியின் சில நிர்வாகிகள் ஆலோசனை கூறியுள்ளனர். கரீனா கபூரின் கணவரான சைப் அலி கான் தந்தை மன்சூர் அலிகானுக்கு இந்த தொகுதியில் நல்ல வரவேற்பு இருந்தது. 

தற்போதும் அவரது குடும்பம் மீது மக்களுக்கு நல்ல மரியாதை உள்ளது.  எனவே அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் போபால் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று கருதும் காங்கிரஸின் சில நிர்வாகிகள் இதற்கு கரீனா கபூர் சரியான தேர்வாக இருப்பார் என்று கூறியுள்ளனர். 

இது தொடர்பாக மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருமான கமல் நாத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.  ந்த தகவலால் நடிகை கரீனா கபூர் காங்கிரஸில் இணைய போவதாக காட்டுத்தீ போல் இச்செய்தி பரவியது. 

ஆனால் இதற்கு நடிகை கரீனா கபூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று கூறியுள்ளார். சினிமாவில் நடிப்பது மட்டுமே தனது தொழில் என்றும் தெரிவித்துள்ளார்.