கணவன் கீழே..! மனைவி மேலே..! பிரபல நடிகை வெளியிட்ட வில்லங்க வீடியோ! தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!

நடிகை கனிகா தன்னுடைய கணவருடன் இணைந்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை கனிகா. இவர் தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். குடும்ப குத்துவிளக்காக வலம்வந்த கனிகா தனக்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் திரைத்துறையை விட்டு சற்று விலகி இருந்தார். 

நடிகை கனிகா இயக்குனர் சேரன் நடித்த ஆட்டோகிராப் , தல அஜித்துடன் வரலாறு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இவரின் இனிய குரலும் சரியான தமிழ் உச்சரிப்பும் இவர் பின்னணிப் பாடகராக உதவின. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, பின்குரலும் கொடுத்து வந்தார்.

இவர் நடித்த திரைப்படமான பைவ் ஸ்டார் திரைப்படத்தில் கருப்பாடலிலும் பாடினார். சச்சின் திரைப்படத்தில் நடிகை ஜெனிலியாவிற்கும் அன்னியன் திரைப்படத்தில் நடிகை சதா விற்கும் , சிவாஜி  திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா விற்கும் பின்னணி  குரல் கொடுத்தார்.

பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தார். தற்போது இவருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். ஆனாலும் நடிகை கனிகா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் வல்லவர் . எப்போதும் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில் தற்போது நடிகை கனிகா வித்தியாசமாக வீடியோ பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் கனிகா மற்றும் அவரது கணவர் இருவரும் இணைந்து கப்பல் வொர்க் அவுட் சேலஞ்சை மேற்கொண்டுள்ளனர். அதாவது கனகாவின் கணவர் கீழே தரையில் படுத்து உள்ளார் . அவர் மீது படுத்திருக்கும் கனிகாவை அவரது கணவர் தாங்கிப் பிடித்திருக்கிறார் . இருவரும் கைகளை ஒருசேர கோர்த்து ஒன்றாக உடற்பயிற்சி செய்யும் விதமாக அந்த வீடியோ அமைந்துள்ளது. .

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இவர்களை வாழ்த்தி வருகின்றனர் . மேலும் இந்த ஜோடியை பாராட்டும் விதமாக கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.