கைவிட்ட கணவர்..! கவனிக்கவும் ஆள் இல்லை..! பரிதாப நிலையில் கரகாட்டக்காரன் நடிகை கனகா!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக விளங்கிய நடிகை கனகா தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் நிலை மோசமடைந்து பரிதாபமான நிலையில் உள்ளார்.


நடிகர் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகியோருடன் கதாநாயகியாக நடித்தவர் பழம்பெரும் நடிகை தேவிகா. இவரின் மகள் தான் நடிகை கனகா. கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கனகா.

நடிகர் ராமராஜன் மற்றும் கனகா நடித்த கரகாட்டகாரன் திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய சாதனையை படைத்தது. கரகாட்டக்காரன் திரைப்படத்திற்குப் பின்னர் நடிகை கனகா நடிகர் ரஜினி, பிரபு ,கார்த்திக் ஆகிய முக்கிய நடிகர்களுடன் கதாநாயகியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவ்வாறு புகழின் உச்சியில் இருந்த கனகா தற்போது கவனிப்பதற்கு யாருமின்றி பரிதாபமான நிலையில் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இவர் ஆலப்புழாவில் உள்ள அனாதைகள் பராமரிப்பு இல்லம் ஒன்றில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஒரு சிலர் நடிகை கனகா தனது சொத்துக்களை யாராவது பறித்து விடுவார்களோ என்ற பயத்தினாலேயே யாருடனும் எதுவும் பேசிக்கொள்ளாமல் வீட்டில் தனிமையாக உள்ளார் என்றும் அங்கு வசித்து வரும் சிலர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கனகா கவனித்துக் கொள்வதற்கு யாருமின்றி தற்போதைய உள்ள பரிதாபமான நிலையைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கனகாவின் கணவர் முத்துக்குமார் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறுகிறார்கள். இதனால் தனிமையில் தனது வாழ்வை ஓட்டி வருகிறார்.