நடிகை கல்யாணி தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
குழந்தைக்கு தாயான குழந்தை நட்சத்திரம் கல்யாணி! விஜய் டிவி ஆண்டாள் இப்போ என்ன செஞ்சிட்டு இருக்காங்க தெரியுமா?
தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த கல்யாணி என்று அழைக்கப்படும் பூர்ணிதா , கடந்த 2001 ஆம் ஆண்டு , நடனப்புயல் பிரபுதேவா நடித்திருந்த அள்ளித்தந்த வானம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருப்பார். இதற்கு பின்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா , ஜெயம்ரவி நடித்திருந்த ஜெயம் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து இருப்பார் நடிகை கல்யாணி.
இவர் திரைப்படங்களை தொடர்ந்து சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றார். அண்ணாமலை, சாருலதா , கங்கா , ஆண்டாள் அழகர் , பிரிவோம் சந்திப்போம் போன்ற சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றார் நடிகை கல்யாணி. சீரியல்களை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ரோஹித் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. பெண் குழந்தைக்கு நவ்யா என்று பெயரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரோஹித் மற்றும் கல்யாணி தம்பதியினர் தங்களுடைய குழந்தைக்கு முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை கல்யாணி. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் , துருதுருவென்று நடித்து ரசிகர்களை கொள்ளை கொண்ட கல்யாணியா இது என்று கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.