இவரைத் தான் காதலிக்கிறேன்..! பிரபல இயக்குனரின் மகள் வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ!

இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி தன்னைப் பற்றிய பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.


இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி சிவகார்த்திகேயனுடன் இணைந்து தமிழ் சினிமாவில் "ஹீரோ" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை கல்யாணி , தன்னைப் பற்றிய ஒரு தகவலை கூறியுள்ளார். நடிகை கல்யாணியின் முதல்முதலாக தெலுங்கு சினிமாவின் மூலம் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் திரையுலகில் கால்பதித்தார். தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தற்போது தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார் நடிகை கல்யாணி.

நடிகை கல்யாணியும் மோகன்லாலின் மகன் பிரணவும் சிறுவயது முதலே நண்பர்களாக பழகி வந்துள்ளனர். மோகன்லாலின் மகனான பிரணவ் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் மோகன்லாலும் இயக்குனர் பிரியதர்ஷன் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்களைப் போல் கல்யாணியும் பிரணவும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது . 

ஆனால் கல்யாணியிடம் கேட்டபொழுது பிரணவும் நீங்களும் காதலிக்கிறீர்கலா ? என்று கேள்வி எழுப்பும் போது , பதில் கூறாமல் மழுப்பி விட்டார். மேலும் பேசிய அவர், "நான் ஒருவரை மனதார காதலிக்கிறேன். நான் அவரை காதலிப்பது என்பது என் பெற்றோருக்கும் தெரியும். ஆனால் தற்போதைக்கு அவரைப் பற்றிய தகவலை நான் கூற மாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.