புதுக் காதலன் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல இயக்குனரின் முன்னாள் மனைவி!

நடிகை கல்கி கோச்லின் தன் காதலர் உடனான உறவை உறுதிபடுத்தி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


பாலிவுட்டின் பிரபல நடிகையான கல்கி கோச்லின தன்னுடைய காதலரான ஹர்ஷ்பேக் உடன் இணைந்து இருக்குமாறு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் நடிகை கல்கி ஹர்ஷ்பேக் கன்னத்தில் முத்தமிடுவது போல் காட்சி அளித்து இருந்தார்.

மேலும் கேப்சனாக," உங்களுடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு ஞாயிற்றுக்கிழமை தான் " எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்து கல்கியின் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சிஅடைந்து அவரை வாழ்த்தி வருகின்றனர் . மேலும் கல்கியின் தோழிகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அவரை வாழ்த்திய வண்ணம் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை கல்கி, ஹர்ஷ்பேக் உடன் இருக்குமாறு புகைப்படத்தை வெளியிட்டு அவர்கள் இருவருக்கும் காதல் இருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி தந்திருந்தார் . தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக புதிய பதிவையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன் நடிகை கல்கி இயக்குனர் அனுராக் எனும் இயக்குனரை திருமணம் செய்துகொண்டிருந்தார் . இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இருப்பினும் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர்.