கணவரை பிரிந்துவிட்டேன்! இப்போது 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்! முன்னணி நடிகை வெளியிட்ட சீக்ரெட்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கல்கி கோச்லின்.


இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகை கல்கி தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார் .மேலும் கர்ப்பமாக இருப்பதன் மூலமாக தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த போது பகிர்ந்து கொண்டார்.

நடிகை கல்கி கோஷலின் , ஹெர்ஷ்பெர்க் என்பவரை நீண்டகாலமாக காதலித்து வருகிறார். தற்போது நடிகை கல்கி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறி உள்ளார். தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை கல்கி , வேலை நிமித்தமாக ஊர் ஊராய் சுற்றி வருவதாகக் கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் தன்னுடைய தாய்மையின் பரிமாணத்தை பற்றி கூறினார். வயிற்றில் இருக்கும் தன்னுடைய குழந்தையை நினைத்து அவர் ஒவ்வொரு நாளும் ஆசையோடு கனவு காண்பதை பற்றியும் பேசினார். நீர்வழி மூலமாக தன் குழந்தையைப் பிரசவிக்கபோகிறாராம் நடிகை கல்கி.தற்போது நடிகை கல்கி வெப்சீரிஸில் பிஸியாக நடித்து வருகிறார்.