முக்காடு..! தலையில் பூக் கூடை..! தர்காவில் சிறப்பு வழிபாடு..! மதம் மாறினாரா காஜல் அகர்வால்?

தமிழ் ,தெலுங்கு என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் நடிகை காஜல்அகர்வால்.


தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். கடந்த சில மாதங்களாகவே காஜல் அகர்வாலின் திருமணம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட எனக்கு பிடித்தார் போல் மாப்பிள்ளை கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

 இதனையடுத்து நடிகை காஜல் அகர்வாலின் பெற்றோரும் தீவிரமாக மாப்பிள்ளை தேடும் படலத்தை துவங்கியுள்ளனர் . கூடியவிரைவில் இவரது திருமணம் நடைபெறும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உண்டாகி உள்ளது. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் அவரது தாய் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அஜ்மீர் தர்காவில் பூஜை ஒன்றில் பங்கேற்று உள்ளனர்.

  இந்த பூஜைக்காக தலையில் பூ கூடை சுமந்து கொண்டு சிறப்பான பூஜையை மேற்கொண்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். இந்த தொழுகைக்கான முக்கிய நோக்கமே நடிகை காஜல் அகர்வாலின் திருமணம் நல்ல முறையில் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் என்று கூறப்படுகிறது. 

  இவ்வாறாக காஜல் அகர்வால் தலையில் கூடை சுமந்து சென்ற காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இதனை பார்த்த நெட்டிசன்கள் விரைவில் காஜல் அகர்வாலுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்து திருமணம் ஆக வேண்டும் எனவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.