திருமணம்..! குழந்தை..! தினமும் அழுகை..! காதல் சந்தியா வாழ்வில் இப்படி ஒரு சோகமா? அதிர வைக்கும் காரணம்!

தமிழ் சினிமாவில் கடந்த 2004ஆம் ஆண்டு காதல் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை சந்தியா.


இந்தத் திரைப்படத்தில் சந்தியாவின் அசாத்தியமான நடிப்பின் காரணமாக இவரை ரசிகர்கள் அனைவரும் காதல் சந்தியா என்று அழைக்க ஆரம்பித்தனர். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அதாவது 1.2 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம்சுமார் 10 கோடி வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் காதல் சந்தியா.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து காதல் சந்தியா தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சந்தியாவிற்கு சரியான பாடம் வாய்ப்பு அமையாததால் திரை உலகை விட்டு விலகி இருந்தார். இதனைத்தொடர்ந்து நடிகை சந்தியா நடித்த ஒரு சில திரைப்படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றுதான் கூறவேண்டும்.

பின்னர் நடிகை சந்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரை கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற இருந்தது. பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தார் நடிகை சந்தியா. 

பின்னர் நடிகை சந்தியாவிற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே போஸ்ட்பார்டம் ப்ளூஸ் (Postpartum blues) எனப்படும் மன அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நோய் அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தையும் மிகுதியான அழுகையும் தந்ததாம் . அதாவது காரணமே இல்லாமல் தினம்தோறும் மாலையில் 5 மணி முதல் 7 மணி வரை தொடர்ந்து அழுவதையே தன்னுடைய வழக்கமாக கொண்டிருக்கிறார் நடிகை சந்தியா.

திருமணம் முடிந்து சுமார் இரண்டரை ஆண்டு காலமாக சந்தியா இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிர சிகிச்சை மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் நடிகை சந்தியா இந்த நோயில் இருந்து விடுபடுவதற்கு உதவியாக இருந்ததாக கூறியிருக்கிறார்.

மேலும் இந்த நோயால் மற்ற தாய்மார்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேவையான விழிப்புணர்வையும் தற்போது ஏற்படுத்தி வருகிறார் நடிகை சந்தியா. குடும்பத்தினரின் உண்மையான ஆறுதலும் நம்பிக்கையும் இந்த நோயில் இருந்து விடுபடுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று நடிகை சந்தியா கூறுகிறார்.