இப்படி இருந்த நக்மா இப்போ எப்படி ஆகிட்டாங்க தெரியுமா? வைரலாகும் 90ஸ் கவர்ச்சி நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே!

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நக்மா தன்னுடைய தங்கை ஜோதிகாவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது.


90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா. நக்மாவை போலவே அவரது தங்கை ஜோதிகாவும் பலரது கனவு கன்னியாக வலம் வந்தார் . பின்னர் இருவரும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் காரணமாக சினிமா துறையை விட்டு விலகி அவரவர் தங்களுடைய பணியில் பிஸியாக மாறிவிட்டனர். இந்நிலையில் நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . 

பின்னர் குடும்ப வாழ்க்கையில் இணைந்த அவர் சினிமா துறையை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் நக்மா தன்னுடைய தங்கையான ஜோதிகாவை சமீபத்தில் சந்தித்திருக்கிறார். இருவரும் சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.