ஜோதிகாவுடன் முதல் முறை..! புதுப்படத்தில் இணையும் இளம் நடிகர்! யார் தெரியுமா?

நடிகை ஜோதிகா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் முன்னணி நடிகர் பற்றின தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.


நடிகை ஜோதிகா தன்னுடைய திருமணத்திற்கு பின்பு சிறிது காலம் திரைத்துறையை விட்டு விலகியிருந்தார் . அதற்குப்பின்பு 36வயதினிலே ,காற்றின்மொழி, ஜாக்பாட், ராட்சஸி ,நாச்சியார் போன்ற பல திரைப்படங்களில் நடித்து திரைத்துறைக்கு சிறப்பான கம் பேக் அளித்தார்.

 தற்போது ஜோதிகா நடிகர் கார்த்தியுடன் இணைந்து இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனை அடுத்து பொன்மகள்வந்தாள் எனும் திரைப்படத்திலும் நடிகை ஜோதிகா நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். 

மேலும் நடிகை ஜோதிகா பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை அடுத்து மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார் . இத்திரைப்படத்தை கத்துக்குட்டி திரைப்படத்தை எடுத்து அதன்மூலம் பிரபலமான இயக்குனராக திகழ்ந்த ரா .சரவணன் என்பவர் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

 மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை ஜோதிகாவுடன் பிரபல நடிகர் சசிகுமார் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி , சூரி ஆகியோரும் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியுள்ளனர் . அதுமட்டுமில்லாமல் மற்றும் நடிகர்களுக்கான தேர்வும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது .

இந்த புதிய திரைப்படத்தில் நடிகர் மற்றும் இயக்குனருமான சசிகுமார் அண்ணனாகவும் நடிகை ஜோதிகா அவருடைய தங்கை ஆகும் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.