ஒரு அண்ணன் தற்கொலை! இன்னொரு அண்ணன் விபத்தில் பலி! ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தை துரத்தும் துர் மரணங்கள்!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தில் நடந்த சோகத்தை பற்றி சமீபத்திய பேட்டியில் மனம் திறந்துள்ளார்.


சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்பு கலைஞர் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று இவர் பிரபலம் ஆனார். அதன் பின்பு நீ தானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இவர் அறிமுகமானார்.  அதன் பின்னர் இவர் அட்டகத்தி படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் பிரபலமானார் . பண்ணையாரும் பத்மினியும் ,ரம்மி , தர்மதுரை ,காக்கா முட்டை போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார்.  கேளடி கண்மணி , அழகு போன்ற சீரியல்களில் நடித்துள்ள மணிகண்டன் என்பவர் இவரது சகோதரர் ஆவார். 

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திரையுலகிற்கு வருவதற்கு முன்னால் அவர் பட்ட கஷ்டங்கள் அனைத்தைப் பற்றியும் கூறியுள்ளார். சீரியல்களில் நடித்து வரும் சகோதரர் மணிகண்டனை தவிர இவருக்கு இரண்டு அண்ணன்கள் இருந்துள்ளனர். இது பற்றி பேசிய அவர் எனக்கு 12 வயது இருக்கும் போது என்னுடைய மூத்த அண்ணன் ராகவேந்திரா இறந்துவிட்டார். அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதனால் அவர் இறந்தது கொலையா ,தற்கொலையா என்று கூட எங்களுக்கு இதுவரை தெரியவில்லை.

அதேபோல என்னுடைய இன்னொரு அண்ணன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு சம்பாதிக்க ஆரம்பித்தார். தங்களது குடும்பத்தைக் காப்பாற்ற தன்னுடைய மகனின் சம்பளம் வருவதை எண்ணி எனது தாயார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவரும் சாலை விபத்தில் இறந்துவிட்டார். நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது பெசன்ட்நகர் சூப்பர் மார்க்கெட்டில் புதிதாக அறிமுகமாகிய சாஸ் ஒன்றை மார்க்கெட்டிங் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். அப்பொழுது எனக்கு ஒரு நாளைக்கு 225 ரூபாய் சம்பளமாக கொடுப்பார்கள். பின்னர் பர்த்டே பார்ட்டி மற்றும் பல ஈவன்ட்களை நான் ஹோஸ்ட் செய்ய ஆரம்பித்தேன். அதன் மூலமாக 500 ரூபாய் ,1000 ரூபாய் சம்பளமாக கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

அதற்குப் பிறகுதான் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மற்றும் கலைஞர் டிவியில் நடத்தப்பட்ட மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்குபெற்ற தற்போது மிகப்பெரிய கதாநாயகியாக  இவர் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.