முத்தக் காட்சி, ஆடைகளை களையும் காட்சி..! வயது வந்தவர்களுக்காக ஹன்சிகா எடுத்த முடிவு!

தமிழ் , தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் நடிகை ஹன்சிகா.


தற்போது நடிகை ஹன்சிகா திரைப்படங்களில் நடிப்பதை போல் வெப்சீரிஸ்-ல் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தெலுங்கு சினிமாவில் தெனாலிராமன் BA. BL என்ற திரைப்படத்தில் ஹன்சிகா நடித்திருக்கிறார். தற்போது இந்த திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அவ்வாறாக நடிகை ஹன்சிகா பிரமோஷன் பணியில் ஈடுபட்டபோது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசும் அவர் நான் புதிய தெலுங்கு திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகவில்லை . அதற்கு பதிலாக வெப்சீரிஸ்-ல் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளேன் என்று கூறினார்.

தற்போது நடிகை ஹன்சிகா நடித்து வரும் இந்த வெப்சீரிஸை பாகுமதி மற்றும் பிள்ளை ஜமீன்தார் ஆகிய திரைப்படங்களின் மூலம் பிரபலமான இயக்குனர் ஜி .அசோக் இயக்கி வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த வெப்சீரிஸ் அமைக்கப்பட்டிருப்பதாகவும் நடிகை ஹன்சிகா கூறியிருந்தார்.

மேலும் தன்னுடைய வேலை 90% முடிவடைந்ததும் வெறும் நான்கு நாட்கள் மட்டும் ஷூட்டிங் இருப்பதாகவும் கூறியிருந்தார். நடிகை ஹன்சிகா தான் நடித்திருக்கும் இந்த புதிய வெப்சீரிஸ்-ல் முத்தக் காட்சிகள் மற்றும் கவர்ச்சி காட்சிகள் ஆகியவற்றில் நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்க கூடிய சீரிஸ் இது என்கிறார்கள்.