தமிழ் திரையுலகில் துன்புறுத்தலுக்கு ஆளானேன்! மலையாள நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!

தமிழ் திரைப் படங்களில் நடித்ததால் மன ரீதியாக பல துன்பங்களுக்கு ஆளானேன் என்று பிரபல நடிகை கூறியுள்ளார்.


தமிழ்சினிமாவில் ஜீவா நடித்த சிங்கம் புலி மற்றும் விக்ராந்த் நடித்த முதல் கனவே ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஹனிரோஸ். இவர் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு மலையாளத் திரைப்படங்களை கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் ஆரம்பத்தில் சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறேன். சில மேனேஜர்கள் இந்த படத்தில் நடியுங்கள். நீங்கள் பெரிய ஆளாக ஆகிவிடலாம் என்று சொல்லுவார்கள். அவர்களின் வார்த்தையை நம்பி சில படங்களில் நடித்துள்ளேன். 

ஆனால் படத்தில் நடிக்க தொடங்கிய பின்புதான் தெரியும் அது எந்த விதத்திலும் நமக்கு உதவாது என்று. அந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. அவ்வளவு கஷ்டங்களை நான் அந்த படங்களில் நடித்ததன் மூலம் பெற்றுள்ளேன் எனவும் நடிகை ஹனி ரோஸ் கூறியுள்ளார். 

சில படங்களில் நடிக்கும்போது சிலர் மனரீதியாக மிகவும் துன்புறுத்துவார்கள் எனவும் நடிகை ஹனிரோஸ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.