என் வாழ்க்கையில் நான் எதை செய்வதற்கும் தயங்கியதில்லை..! பாஜக அலுவலகம் வந்த கவுதமி!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை கவுதமி ஆவார்.


இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக உலகநாயகன் கமலஹாசனுடன் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிரிந்துவிட்டனர். 

நடிகை கௌதமிக்கு சினிமாவில் ஆர்வம் இருப்பது போல் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் நடிகை கவுதமி பாஜக கட்சியில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளருக்கான விருப்பமனு விண்ணப்பம் நேற்றைய தினம் பாஜக அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இந்த மனுக்களை வேட்பாளர்களுக்கு விநியோகித்தது நடிகை கௌதமி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பப்படும் வேட்பாளர்களிடம் மட்டுமா பாஜக விண்ணப்பத்தை வழங்கிவருகிறது என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் என் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு நான் தயங்கியதில்லை எனவும் கூறியிருந்தார். நடிகை கௌதமி பேசிய வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.