கொழுக் மொழுக் ஜெனிலியாவுக்கு என்ன ஆச்சு? இப்டி மெலிஞ்சிட்டாங்க! ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் புகைப்படம் உள்ளே!

தமிழ் , தெலுங்கு , கன்னடம் ,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் நடிகை ஜெனிலியா .


இவர் முதன் முதலில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். முன்னணி நடிகர்களான விஜய் , ஜெயம் ரவி, தனுஷ் போன்றோருடன் நடித்து புகழ் பெற்றுள்ளார் நடிகை ஜெனிலியா. அதிலும் சந்தோஷ் சுப்பிரமணியம் எனும் திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக வரும் ஜெனிலியா தன்னுடைய துறுதுறு நடிப்பால் தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினார் என்றே கூற வேண்டும்.

தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி , கன்னடம் , தெலுங்கு போன்ற திரையுலகிலும் தன்னுடைய துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். இதனை அடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு ஹிந்தியில் பிரபல நடிகரான ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. குழந்தைகளுக்காக ஜெனிலியா திரையுலகை விட்டு விலகி இருந்தார் . மீண்டும் ஜெனிலியாவின் நடிப்பை நாம் எப்போது பார்க்க போகிறோம் என்று ஏங்கியிருந்த ரசிகர்களின் மனங்களில் மீண்டும் குடியேற வந்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். 

ஏனெனில் 5 ஆண்டுகளாக திரைத்துறை பக்கமே வராத ஜெனிலியா தற்போது பேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்றுள்ளார் . அப்போது அங்கு எடுத்த அழகிய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் இன்னும் இவர் இப்படியே இருக்கிறாரா ? என்று மிகவும் ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.