குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை கௌதமி கூறியுள்ளது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுக்கு எதிராக பாஜகவில் களமிறங்குகிறாரா கௌதமி?
இந்த மாத துவக்கத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது .இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாடெங்கிலும் பலத்த போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்த வண்ணம் உள்ளன. இதனை எதிர்த்து பல கட்சி தலைவர்களும் இந்த குடியுரிமை சட்டத்திருத்தம் நம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று கூறி கோஷங்களை எழுப்பி வருகின்றனர் . அந்த வகையில் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் குடியுரிமை சட்டத் திருத்தத்தில் முஸ்லிம்களையும் இலங்கை தமிழர்களையும் சேர்க்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதுமட்டுமில்லாமல் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த மசோதாவை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை கௌதமி கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது பேசியிருக்கிறார். பாஜக கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய அவர் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்கள் இம்மாதிரியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இதன் மூலம் நடிகை கௌதமி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கௌதமி பேசிய இந்த வார்த்தைகள் மக்கள் நீதி மையம் கட்சி தலைவரான கமலஹாசனை நேரடியாக தாக்கும் விதமாக இருப்பதாக கூறி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக கட்சியானது நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக நடிகை கௌதமி களமிறக்கி உள்ளதாகவும் பலரும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.