பிரபல நடிகர் மற்றும் நடன இயக்குனரான ராகவா லாரன்சின் தம்பி எல்வின் என்ற வினோத்தின் மீது இளம் நடிகை ஒருவர் லவ் டார்ச்சர் பண்ணுவதாக கூறி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லவ் பண்ணச் சொல்லி மிரட்டுகிறார்! ராகவா லாரன்ஸ் தம்பி மீது இளம் நடிகை பகீர் புகார்!
தமிழ் , தெலுங்கு, என பல மொழிகளில் நடிகராகவும் மிகப்பெரிய நடன இயக்குனராகவும் பணியாற்றி வருபவர் ராகவா லாரன்ஸ். இவருடைய நடனத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இவருக்கு இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இது மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கும் உறவுகள் இன்றி தவிக்கும் பலருக்கும் நிழலாய் இருந்து சேவையை செய்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு எல்வின் என்ற வினோத் என்பவர் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இவர்மீது தெலுங்கு சினிமா துறையை சேர்ந்த துணை நடிகை ஒருவர் புகார் அளித்திருக்கிறார். நடிக்கும்போது எல்வின் பழக்கம் ஆனதாகவும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வதாகும் அந்த நடிகை பேட்டி ஒன்றில் பங்கேற்று கூறினார்.
மேலும் இதனைப் பற்றி வெளியே கூறியதால் செல்வாக்கை பயன்படுத்தி தன் மீது அவதூறு வழக்கு போட்டு சிறையில் தள்ளியதாகவும் எல்வின் மீது குற்றம் சாட்டினார். வெளியே வந்த அவரை கொலை செய்ய முயற்சித்ததாக எல்வின் மீது அவர் பழி சுமத்தி இருக்கிறார். நடிகையின் பகிரங்க தகவல் தமிழ் , தெலுங்கு என இரு வேறு சினிமா துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.