52 வயதில் 74 வயது ஆண்மகனை 5வது கணவன் ஆக்கிய பிரபல நடிகை..! யார் தெரியுமா?

52 வயதாகும் நடிகை பமீலா ஆண்டர்சன், 74 வயதாகும் மொகுல் ஜான் பீட்டர்ஸுடன் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். 


முன்னாள் பேவாட்ச் நட்சத்திரம் பமீலா ஆண்டர்சன் ஐந்தாவது முறையாக, சிகையலங்கார நிபுணராக வலம்வந்த மொகுல் ஜான் பீட்டர்ஸுடன் திருமணம் செய்து கொண்டார். நடிகையும் விலங்கு உரிமை ஆர்வலரும் பேட்மேன் தயாரிப்பாளர் பீட்டர்ஸை திங்களன்று திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் நேற்றையதினம் தனியார் ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர்.

கனடாவில் பிறந்த பமீலா ஆண்டர்சன், 52, இதற்கு முன்பு ராக்கர்ஸ் டாமி லீ மற்றும் கிட் ராக் ஆகியோரை மணந்தார். அவர் இரண்டு முறை தொழில்முறை போக்கர் வீரர் ரிக் சாலமனை மணந்தார்.சமீபத்தில் அவர் பிரான்சில் வாழ்ந்த பிரெஞ்சு கால்பந்து வீரருடன் டேட்டிங் செய்துவந்தார். தற்போது முன்னாள் ஹேர் ஸ்டைலிஸ்டான 74 வயதான ஜான் பீட்டர்ஸ், என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஜான் பீட்டர்ஸ் "எல்லா இடங்களிலும் அழகான பெண்கள் இருக்கிறார்கள், என்னால் தேர்வு செய்து கொள்ள முடியும், ஆனால் 35 ஆண்டுகளாக நான் பமீலாவை மட்டுமே விரும்பினேன்" என கூறியிருக்கிறார். ஜான் பீட்டர்ஸ் முதன்முதலில் 1980 களில் பிளேபாய் மாளிகையில் பமீலா ஆண்டர்சனை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

 இதனையடுத்து தற்போது மீண்டும் இவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் வசப்பட்டு திருமணமும் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பமீலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.